Monday, 10 April 2017

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... !


முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... !


சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.

வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும்’ என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.

சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.

பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, ‘பொடுதலை’ என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

 சிலர் தொடர்ந்து தலைக்கு டை அடித்துக்கொள்வார்கள். கேட்டால், ‘இயற்கையான மூலிகை டைதான் போடுகிறோம்’ என்பார்கள். 100 சதவிகித ‘மூலிகை டை’ என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. கறுப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! எனவே, டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். அதைத் தவிர்ப்பதே நல்லது.

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,


முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்.......... 1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். 8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

புளியானம்! வாசகிகள் கைமணம்!!


புளியானம்

தேவையானவை: கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் -  ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. 

செய்முறை: தேங்காய் எண்ணெயை சூடாக்கி... சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,  புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து... சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

கிளீன் அண்டு கிளியர் சருமம்... பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!



முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை... என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை... சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்...

*கண்  கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

*நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கறுப்பு வளையங்கள் படிப்படியாக நீங்கும்.

*முகத்தில் பூசும் ஃபேஸ் பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக, தனியாகத் தெரியாது.

*வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம்சூடு பதத்துக்கு ஆறியதும், அதை தலையில் நன்கு தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகுப் பிரச்னை தீரும். பொடுகால் ஏற்படும் பருக்கள் தவிர்க்கப்படும்.

*வெளியே செல்வதற்கு முன்பு, சுத்தமான நீரால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டியால் முகத்தில் மசாஜ் செய்வதால் நீண்ட நேரம் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*எண்ணெய் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும் கூட பருக்கள் ஏற்படுகின்றன. மேலும், உடலில் சேரும் கொழுப்பு, மன இறுக்கம், மலச்சிக்கல் போன்றவற்றாலும்கூட பருக்கள் உண்டாகின்றன. இவற்றைத் தவிர்க்க, துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

*தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீர் ஊற்றி உப்பு, எலுமிச்சைச் சாறு விட வேண்டும். அதில் இரு பாதங்களையும் பத்து நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல் கை விரல் நகங்களையும் சுத்தம் செய்யலாம்.

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... ! முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்... ! சிறு வயதிலிருந...